கொரோனா மருத்துவம்.! தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்.! முறைப்படுத்துமா அரசு.?

சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கா வாங்கப்படும் அதிக கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், அரசு தனியார் மருத்துவமனைகளில் தற்போது அதிகபட்சமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இலவச கட்டணம் தான். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 4500 ரூபாய் வாங்கவே அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் 6000 ரூபாய் வரை வாங்குவதாகவும், முடிவு தெரிய 2 நாட்கள் ஆகிறது இதனால், இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிக்கப்படாமலே அறை வாடகை வசூலிக்க படுகிறதாம்.
மேலும், சில மருத்துவமனைகளில் ஒரு நாள் அறை கட்டணம் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கூட வசூலிக்கப்படுகிறதாம். ஐசியூ அறை கட்டணம், மருத்துவர் அணியும் கவச உடை செலவு ஆகியவை நோயாளியின் கணக்கில் வசூலிக்கப்படுகிறதாம்.
தனியார் மருத்துவமனைகளின் இந்த கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் சி N.ராஜா கூறுகையில்,’தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை செலவுகளை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெற எளிதாக இருக்கும்.’ என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025