டாஸ்மாக் மூடல்.. தமிழக அரசு மேல்முறையீடு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. முதல் நாள் 170 கோடியும், இரண்டாம் நாளான நேற்று 120 கோடியும் வசூலானது.
இதையடுத்து, நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் ஆன்லைன் மூலம் மது விற்றுக்கொள்ளலாம் என கூறியது.
இந்நிலையில், தமிழகத்தில மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)