மே 10 -ஆம் தேதி – உலக அன்னையர் தினம்
ஆண்டுதோறும் மே 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை, உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் நாம் நமது அன்னையின் ஆசிர்வாதத்தை பெற்று, அன்னைக்கு நன்றி கூற வேண்டும். அவரின் வேலைகளை அன்று ஒருநாளாவது செய்வது நம்மைப்போல பிள்ளைகளின் கடமை. சிலர், தங்களின் தாய்க்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பர்.
இந்த புனித தினம், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த புனிதமான தினத்தை அமெரிக்கா மாகாணத்தில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவர் அறிவித்தார். இது, நம்மை நல்லபடியாக வளர்த்த அன்னையை பெருமைப்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
நாம் என்ன கேட்டாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் நமக்காக வாங்கி தருபவள், அம்மா. தனது குழந்தையை தீய வழியில் செல்லாமல் பார்த்துக்கொள்பவள், அம்மா. நாம் என்ன தவறு செய்தாலும் நம்மை வெறுக்காமல் அந்த தவறிலிருந்து நம்மை திருத்துபவள், அம்மா.
அன்றைய தினத்தில் அன்னை செய்த தியாகங்களை நினைத்து நாம் அவளுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக, அவள் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் செய்யலாம். அதாவது காலை எழுந்து காபி போடுவது முதல் இரவு உறங்கும் வரை அனைத்தும். அவளுக்கு பிடித்த உணவை நாமே நம் கையால் சமைத்து கொடுத்து ஊட்டி விட்டு மகிழ்விக்கலாம். இறுதியாக, அன்னைக்கு பிடித்த பொருட்களை பரிசாக கொடுத்து, அவளின் ஆசிர்வாதத்தை பெறுவதை விட எதுவும் சிறந்ததல்ல.