டிரம்ப் தனிப்பட்ட உதவியாளருக்கு தொற்று உறுதி.!
டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 12,92,879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 74,942 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் தினமும் குறைந்தது 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு, பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
டிரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்பிற்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், டிரம்பிற்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அதேபோல துணை ஜனாதிபதியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கும் நோய் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.