இன்றைய நாள் (08.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : திறமையாக செயல்பாடுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுடன் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம் : முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். உங்களது தெளிவான தவகல் தொடர்பு மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுனம் : இன்றைய பணிகள் கடினமாக தோன்றும். யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம் : பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். பொறுமையுடனும், மனஉறுதியுடனும் இருக்க வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். சாதிப்பதற்கு உகந்த நாள்.
கன்னி : சிந்தித்து திறமையாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். அதனால் சூழ்நிலையை கணித்து செயலாற்றுங்கள். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.
துலாம் : நல்லது கெட்டதை உணர்ந்து கொள்ளும் நாள். உங்களுக்கான இலக்குகளுக்காக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
விருச்சிகம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்காது. உற்சாகமின்றி காணப்படுவீர்கள். மனகுழப்பங்கள் ஏற்படும் நாள். இன்று முடிவுகள் எடுக்க வேண்டாம். அது உங்களுக்கு நல்லதாக அமையாது.
தனுசு : புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும் நாள். உங்கள் முன்னேற்றத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மகரம் : வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் நாள். திருப்திகரமான நாளாக இன்று அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பிரார்த்தனைகள் செய்வது நல்ல பலனை தரும்.
கும்பம் : அன்றாட பணிகளை செய்யும் போது கவனமுடன் செயலாற்ற வேண்டும். சில ஏமாற்றங்கள் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகளை தவிர்த்திடுங்கள். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை முடிப்பதில் தடைகள் காணப்படும். கவலைகளை மறந்து அமைதியாக செயல்படுங்கள்.