ஜுன், ஜுலை மாதங்களில் தொற்று உச்சகட்டத்தை அடைய வாய்ப்பு.!

இந்தியாவில்  ஜுன், ஜுலை மாதங்களில் கொரோனா தொற்று உச்சகட்டத்தை அடைய வாய்ப்பு உள்ளது என  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும்  மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால்  1783 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,267 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஏற்படும் தொற்று விகிதத்தை வைத்து பார்த்தால்  ஜுன், ஜுலை மாதங்களில் இந்த தொற்று உச்சகட்டத்தை அடையும் வாய்ப்பு உள்ளது என  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதால் இதில் ஏதேனும் மாற்றமும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk