அதர்வாவின் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் போஸ்ட்ரை வெளியிட்ட படக்குழுவினர்..!

Default Image

அதர்வாவின் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் போஸ்ட்ரை வெளியிட்ட படக்குழுவினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா முரளி. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று  ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை ‘”,’ இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய  டைரக்டர் ஆர். கண்ணன்  ‘  இந்த படத்தை இயக்கி தயாரிக்கிறார் .  இந்த படத்தில்  அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன்  நடிக்கிறார்.  “தள்ளிப்போகாதே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வானம் கொட்டட்டும்     படத்தில் நடித்த  அமிதாஷ் பிரதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தள்ளிப்போகாதே படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் 20 நாட்களும், சென்னையில் 30நாட்களும் நடத்தப்பட்டது .இந்த படம் நானி, நிவேதா தோமஸ் நடிப்பில் வெளியான நின்னு கோரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சமென்பது மடமையடா படத்திலுள்ள பாடலின் மூலம் தான் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார் 

இந்த நிலையில் நடிகர் அதர்வா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அந்த வகையில் தள்ளிப்போகாதே படக்குழுவினர் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் புது போஸ்ட்ரை வெளியிட்டு அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளனர். அதில் ஸ்டைலிஷ் லுக்கில் செம மாஸ்ஸாக இருக்கிறார் அதர்வா. மேலும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை அதர்வாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்