ராஜஸ்தானில் புதிதாக 83 பேருக்கு கொரோனா..பலி எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது.!
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், மொத்தம் இதுவரை 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,783 ஆகவும் உள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட 52,952 பேரில் 15,267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. நாட்டிலேயே அதிகமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 16758 பேர் பாதிக்கப்பட்டு, 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 3317 பேர் பாதிக்கப்பட்டுளர்னர். இன்று மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3400 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று புதிதாக கொரோனா கண்டறியப்படத்தில் அஜ்மீர் 5, சித்தோர்கர் 16, தோல்பூர் 4, ஜெய்ப்பூர் 13, ஜோத்பூர் 22, கோட்டா 2, பாலி 7, சிரோஹி 1, உதய்பூர் 1 போன்ற மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பலி எண்ணிக்கை 95 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,740 ஆகவும் உள்ளது. தற்போது 1,565 பேர் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.’