ஊரடங்கில் சிக்கிக் கொண்ட பீகார் மாணவர்களை அரசு பேருந்தில் அனுப்பி வைத்த புதுச்சேரி அரசு!
ஊரடங்கில் சிக்கிக் கொண்ட பீகார் மாணவர்களை அரசு பேருந்தில் அனுப்பி வைத்த புதுச்சேரி அரசு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களது சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்றவர்கள் பலரும் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் 8 மாணவிகள் உள்ளிட்ட 23 பேர் நவோதயா பள்ளி கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின்கீழ் கேரளம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்திய மாஹே நவோதயா பள்ளிக்கு வந்திருந்தனர். மார்ச் மாதம் 21 ம் தேதியன்று தங்களது பயிற்சியை முடித்துவிட்டு, மீண்டும் வீடு திரும்ப இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்துள்ள நவோதயா பள்ளிக்கு வந்து 23 மாணவர்களும் தங்கி இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அருண் அவர்கள். மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அருண் அவர்களின் முயற்சியால், அவர்களை பீகாருக்கு இரு அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் இவர்களை வழியனுப்பி வைத்து, பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தொடர்பு கொண்டு பீகார் மாநில மாணவர்களை பாதுகாத்து அனுப்ப கேட்டு கொண்டுள்ளார்.