ராய் லட்சுமியின் பிறந்தநாள் ஸ்பெஷல்.!
இன்று நடிகை ராய்லட்சுமியின் பிறந்தநாள் முன்னிட்டு சிண்ட்ரெல்லா படக்குழுவினர் பிறந்தநாள் கிப்டாக, இவரின் கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
ராய் லெக்ஷ்மி , தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் பல படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் இந்தி மற்றும் தமிழில் உருவான ஜூலி 2 என்ற படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானவர். இவர் ஏராளமாக பேய் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றார். அரண்மனை 2, காஞ்சனா 2 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக மிருகா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி வினு வெங்கடேஷ் இயக்கத்தில் சிண்ட்ரெல்லா என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றை தினம் பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு சிண்ட்ரெல்லா படக்குழுவினர் பிறந்தநாள் கிப்டாக, இவரின் கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இதில் ராய் லெக்ஷ்மி துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்ஷி, ரோபோ சங்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். SSI புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை அஷ்வமித்ரா இசையமைக்கிறார். மேலும் இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லெக்ஷ்மி.
Omg !!! This is a big surprise from the makers ! ???? #Cinderella thank u @vinoovenketesh this is Super special one yay…???????? ❤️???????? pic.twitter.com/nIf5AVkKtV
— RAAI LAXMI (@iamlakshmirai) May 5, 2020