கொரோனா முடிவு வருவதற்கு முன்பே உயிரிழந்த டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்.!
டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு.
டெல்லியில் வடமேற்கு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் இருந்த அனைவரையும் தாங்களாகவே தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா வைரசால் இதுவரை 5104 பேர் பாதிக்கப்பட்டு, 64 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.