இத்தாலியை விட இங்கிலாந்து உயிரிழப்பில் முதலிடம்!
கொரோனா பாதிப்பில் இத்தாலியை விட உயிரிழப்பில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இதன் தாக்கம் குறையாமல் பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து உலகம் முழுவதும், 3,728,047 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 258,356 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், கொரோனாவிலிருந்து 1,242,500 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரை இத்தாலியில் 213,013 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 29,315 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடமாக இத்தாலி தான் கருதப்படுகிறது.
ஆனால், தற்பொழுது இங்கிலாந்தில் 194,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியை விட இங்கிலாந்து உயிரிழப்பில் அதிகம் உள்ளது.