33 சதவீத வேலையாட்களுடன் நிறுவனத்தை செயல்படுத்தலாம்.! – டெல்லி அரசு.!
டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஆட்களை வைத்துக்கொண்டு வேலை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தபட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியா மூளுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலை நகர் டெல்லியில் இத்வரை 4898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல அமல்படுத்த பட்டு வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஆட்களை வைத்துக்கொண்டு வேலை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தபட்டுள்ளது.
இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டிவிட்டரில் பதிவிடுகையில் , டெல்லில் அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 33 சதவீத பணியாளர்களே அனுமதிக்கப்படுவர். மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என தெரிவித்துள்ளார்.