பாகுபலிக்கு அடுத்து இன்னொரு பிரமாண்டம் : ஜான்சி ராணி அப்டேட்
கங்கனா ரனவத் ‘சிம்ரன்’ படத்தின் வெற்றிக்கு பின் நடிக்கும் திரைப்படம் தான் மணிகர்ணிகா. இப்படம் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்க படுகிறது.
இப்படத்தில் நடிகை கங்கனா ரனவத், ஜான்சி ராணி வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. கங்கனாவின் நடிப்பு பசிக்கு இப்படம் நல்ல தீனிதான்.
இப்படத்தை இயக்குபவர் க்ரிஸ். இதற்கு கதை எழுதுபவர் பாகுபலி, பாஜிராவ் மஸ்தானி, மெர்சல் போன்ற படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த S.S.ராஜமௌலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் அவர்கள்.
இப்படத்தின் படபிடிப்பு ஜெய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் ஏப்ரல் 27, 2018 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.