கோயம்பேடு வியாபாரிகளுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை
கோயம்பேடு வியாபாரிகளுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு கொரோனா பரவி வருகிறது.அதுமட்டும் அல்லாமல் கோயம்பேடு சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கோயம்பேட்டில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்ட மக்களும் கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கோயம்பேட்டில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்ட மக்களும் கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 5, 2020