மாட்டு வண்டி மூலம் கிராமங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய சல்மான்கான்.!

Default Image

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.

மேலும் உணவு இல்லாமல் கஷ்டப்படும் பலர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நிவாரண பொருட்களை அனுப்பி உதவியுள்ளார். 

ஆம், உதவி எதுவும் கிடைக்காமல் தவிக்கும்  உள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு சாக்கு சாக்காய் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளார். அந்த கிராமங்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமும் பொருட்களை அனுப்பியுள்ளார்.

இந்த பொருட்கள் அனைத்தையும் வண்டிகளில் ஏற்ற சல்மான்கானுடன் பல பிரபலங்கள் உதவி செய்துள்ளனர். ஆம் பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் உள்ளிட்ட பலர் உதவியது அந்த வீடியோவில் காணலாம். தற்போது இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@jacquelinef143 @vanturiulia @rahulnarainkanal @imkamaalkhan @niketan_m @waluschaa @abhiraj88

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்