சென்னையில் பரவும் கொரோனா ! முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியது.இதனால் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது..குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.
தற்போது சென்னையில் ஏற்பட்டு வரும் கொரனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி மாநகராட்சி அலுவலகத்தில் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.