விஜய்யின் அடுத்த படம் குறித்து விளக்கம் தெரிவித்த சூரரை போற்று இயக்குநர்..!
விஜய்யின் அடுத்த படம் குறித்து விளக்கம் தெரிவித்த சுதாகொங்கரா.
விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில் சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்குகின்ற சுதா கொங்காரா விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியது.
இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அவை யாவும் பொய் என்று விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு டுவிட்டர் கணக்கு இல்லை என்றும், நான் கூறியதாக கூறியது அனைத்தும் பொய் என்றும், எதையும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குநர் சுதா கொங்கரா கூறியதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
A message from my director of #Drohi and now the director of #sooraraipottru
Hi
I am not on any social media. There are lots of fake accounts. Kindly ignore them and stop following them.Updates from them are false and misleading.Thank u
Stay home stay safe ????
Sudha Kongara— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) May 4, 2020