இத்தாலியில் 9 வாரத்திற்குப் பின் பொது இடங்களில் திரண்ட மக்கள்.!

Default Image

கொரோனா வைரஸ் பரவலால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்திய இத்தாலி தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 2,11,938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,079 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே. அதன்பின், மார்ச் 31 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இத்தாலி உச்சத்தை தொட்டுவிட்டதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்தது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் கியூபா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களை அனுப்பி இத்தாலி நாட்டிற்கு உதவி செய்தது. இதன் விளைவாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்த 3வது வாரத்தில் இருந்து கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு பிரதமர் முடிவு செய்தார். அதன்படி, ஊரடங்கில் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டதால் 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் பொது இடங்களில் நடமாட தொடங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 9 வாரங்களுக்கு பின்னர் பூங்காக்கள், உணவகங்கள் திறக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரகங்கள், அருகாட்சியங்கள் மற்றும் சிகை அலங்காரம் நிலையங்கள் ஆகியவை மே 18 ஆம் தேதிக்கு பின் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே மீட்டெடுக்கும் முயற்சியாக தொழிற்சாலைககளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களை வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் மாற்றம் தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தாலி நாட்டில் ஜூன் மாதத்தில் இருந்து முழு இயல்பு நிலை திரும்பும் என அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்