கொரோனா தடுப்பு பணிக்காக புதிய கிருமி நீக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த டி.ஆர்.டி.ஓ…
இந்தியாவில் பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விமான நிலையம், வணிக வளாகம், ‘மெட்ரோ’ ரயில் நிலையம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இதுபோன்ற இடங்களில், ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும், புற ஊதா கதிர்கள் மூலம், கிருமி நீக்கம் செய்யும், கோபுரத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்போது உருவாக்கி அசத்தி உள்ளது.
மேலும், அதிக மக்கள் கூட்டம் வந்து செல்லும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள், மின் சாதனங்களைக் கொண்ட சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில், கிருமி நாசினிகள் மூலம் கிருமி நீக்கம் செய்வது, மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று ஆகும். எனவே இது போன்ற இடங்களில் அந்த பளுவை குறைக்க , ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புறா ஊதா கதிர்கள் மூலம், கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை, டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது. ‘யு.வி., பிளாஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம், 12க்கு 12 அடி அளவுள்ள இடத்தை, 10 நிமிடங்களில் கிருமி நீக்கம் செய்யும் திறன் படைத்தது. 400 சதுர அடி இடத்தை, வெறும் 30 நிமிடங்களில் சுத்தமாக்கும் திறன் படைத்தது, இந்த கிருமி நீக்கம் செய்யும் சாதனத்தை ‘வைபை’ தொழில்நுட்ப உதவியுடன், ‘லேப்டாப்’ அல்லது ‘மொபைல் போன்’ மூலம், தொடாமலேயே, இயக்கவும் முடியும்’ என, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் உதவும் என நம்புகின்றனர் அந்த அதிகாரிகள்.