அரசு இவ்வாறு செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம்!
பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு அமல் படுத்தியது மக்களுக்கு செய்யும் துரோகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பது நாம் அறிந்தது. இந்நிலையில், தற்பொழுது உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தவாறு உள்ளது.
ஆனால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது மதிப்பு கூட்டு வரி போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமலஹாசன், உலகம் முழுவதும் பெட்ரோல் டீசலின் விலை குறைந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் அதன் மீதான மதிப்பு வரியை கூறியுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பது தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு செய்துள்ளது தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது போன்றது.
ஏனென்றால் மக்கள் கடந்த 40 நாட்களாக வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் என கமல் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 4, 2020