கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?

Default Image

நீங்கள் உண்ணும் உணவுகளில் பருப்பு வகைகள் உண்டா என்பது குறித்து நீங்கள் யோசிக்கலாம். கர்ப்ப காலத்தில் பருப்பு உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை இதில் கூறுவதை பாருங்கள்.

கர்ப்ப காலங்களில் சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும. பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய வேண்டும். இது அவர்க்கும், அவரது வயிற்றில்வளர கூடிய குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. சில உணவுகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பனது இல்ல என்றும் சொல்லப்படுகிறது . ஏனென்றால் உங்கள் குழந்தை உங்கள் வயிற்றிக்குள் வளர்ந்து வருகிறது.

நீங்கள் உண்ணும் உணவுகளின் பக்கவிளைவை தங்கள் குழந்தையும் அனுபவிக்கும் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். தாய் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்பொழுது அது அவருடைய குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும். கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை, காய்கறிகள், கீரைகள் மற்றும் மீன்கள் போன்ற சில உணவுகள் பொதுவாக உன்ன வேண்டும் என்பது அறிந்து கொள்ளுங்கள்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது பருப்பு வகைகளையும் உட்கொள்ள வேண்டும். ஒரு கருத்தின் படி கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு மற்றும் பயிறு வகைகள், பீன்ஸ், பட்டாணி, பழங்கள், தனியவகைகள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் உயர்தர கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட்டுகள் வழங்கும் ஆற்றல் நிறைய தேவைப்படுகிறது.ஏனென்றால் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து பெறப்படும் குளுக்கோஸ் கருப்பை வளர்ச்சிக்கு முதல் மூல பொருளாகும். பருப்பு வகையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறதாம்.

கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை சாப்பிடலாம். அதனால் சோகையைத் தடுக்கிறது பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்க உடல் அதிக இரத்தத்தை உண்டாக்குகிறது. உக்ளுங்கு தேவையான இரும்பு சத்து உணவுகளை உணவில்லை என்றால் உங்கள் உடலுக்கு தேவையான சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உருவாக்க முடியாது. அதனால் கர்ப்பிணி பெண்கள் பருப்பு வகைகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் .

மேலும் மலச்சிக்கலைத் தடுக்கிறது மலச்சிக்கல் என்பது பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை என்பதில் மாற்று கருது இல்லை. பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக கிடைக்கிறது. இது குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது. அதனால் இது மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது குடல் பாதை கோளாறுகளையும் எதிர்த்து தடுக்கிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்