#BREAKING: கோயம்பேடு மார்க்கெட்டை மூட முடிவு.!
கொரோனா பரவும் மையமாக மாறி வரும் கோயம்பேடு மார்க்கெட்டை நாளை முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்ததால் தமிழகத்தில் இதுவரை 1409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்ட 527 பேரில் சென்னை சார்ந்தவர்கள் 300 பேர் இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தை மூலமாக இன்று காலை கடலூரில் 107 பேருக்கும், விழுப்புரத்தில் 40 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதையடுத்து , கொரோனா பரவும் மையமாக மாறி வரும் கோயம்பேடு மார்க்கெட்டை முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.