இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42,533 லிருந்து 42,836 ஆக உயர்வு.!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 லிருந்து 42,836 ஆக உயர்ந்துள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக வல்லரசு நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மறுத்து கண்டுபிடிப்பது தான் என்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ஒரு ஆண்டு எடுத்துக்கொள்ளும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலகளவில் இதுவரை 35,85,051 பேர் பாதிக்கப்பட்டு, 2,48,655 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே 11,61,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பொதுமுடக்கமும் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 லிருந்து 42,836 ஆக உயர்ந்துள்ளது. அதுபோன்று பலி எண்ணிக்கை 1,373 லிருந்து 1,389 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 2,115 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024