அசாமில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் 2500 பன்றிகள் உயிரிழப்பு.!

Default Image

அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

அசாமில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய்  ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது. ஆய்வின் முடிவில் அசாமில் பன்றிகள் உயிரிழப்பதற்கு காரணம் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அசாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறுகையில், தொற்று பாதிக்கப்படாத பன்றிகளை காப்பாற்ற  சில நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  இதனால் பன்றிகள் அழிக்காமல் பாதிக்கப்பட்ட பகுதியில் சுற்றி உள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பரிசோதனை நடத்த உள்ளோம். பரிசோதனைக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்ப நோய் பாதிக்கப்பட்டபன்றிகள் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi