இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்யும் ராகவா லாரன்ஸ்..!

Default Image

நடிகர் ராகவா லாரன்ஸ்  இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்து வருகிறார். 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இதில் தென்னிந்தியா சினிமாயுலகில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார்.மேலும் தாய் என்ற சமூக சேவை மூலம் இல்லாதவர்களுக்கு அரிசி முதலான பொருட்களையும் வழங்கி உதவி வருகிறார். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 200பை அரிசி மூட்டை களை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இளைஞர்களை பயன்படுத்தி தாய் முயற்சி மூலம் சமூக சேவை செய்வதை ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

ஹாய் நண்பர்களே, ரசிகர்களே, நான் ஒரு புதிய முயற்சியை தொடங்கினேன். பார்த்திபன் சார் அந்த முயற்சியான தாய் அமைப்பிற்கு 1000கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதிலிருந்து 500கிலோ அரிசியை பள்ளிகளில் படிக்கும் மற்றும் வேலை செய்பவர்களான சதாம், அருண், கோபி, வசந்தி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த உணவுப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு விநியோகிப்பார்கள். இந்த பணியை அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது, அவர்கள் ஒவ்வோருவரும் சிறந்த முறையில் சமூக சேவையை செய்பவர்கள் என்பதை கண்டேன், கேள்விப்பட்டேன். மேலும் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். மேலும்  அவர்களின் பிற செலவுகளுக்காள ரூ. 25000வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவுள்ளேன். மேலும் அவர்கள் நினைத்திருந்தால் கேம்ஸ் விளையாடியும், சமூக ஊடகங்களை ஸ்கோரோலிங் செய்தும் நேரத்தை கழித்திருக்கலாம். ஆனால் அவர்கள் மற்றவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்ய முடிவு செய்தனர். என்னை விட அவர்கள் பெரியவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். எனவே இந்த பொறுப்பையும் நான் அவர்களுக்கு அளிக்கிறேன், ஏனெனில் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். சமூகத்திற்கு சேவை செய்ய முடிந்த வரை முயற்சிக்கும் ஒவ்வோரு இளைஞர்களையும்பாராட்ட வேண்டியது அவசியம் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார் . மேலும் இந்த இளைஞர்கள் அவர்களே சமைத்தும் உணவை வழங்கி உதவு வருகிறார்கள். தற்போது இதற்கு ராகவாவிற்கும், அந்த இளைஞர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்