கோயம்பேடு சந்தை மூலமாக ஒரே நாளில் கடலூரில் 107 பேருக்கு கொரோனா.!
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மட்டுமே, மேலும் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பரவும் மையமாக மாறி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை சென்று வந்தர்வர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து, கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில் இன்று மட்டுமே, கோயம்பேடு சந்தை மூலமாக தொழிலாளர்கள் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 160-ஆக உள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக சுமார் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது