ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.4,01,92,619 கோடி அபராதம் வசூல்.!

Default Image

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,07,895 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,009 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  இதுவரை வெளிய சுற்றியவர்கள் மீது 3,85436 வழக்குகள் போடப்பட்டு, ரூ4,01,92,619 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, பின்னர் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்