சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்- சோனியா காந்தி அறிவிப்பு
சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும் என்று சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் முடிவு செய்தது.மேலும் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர்கள் ,வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.ஒரு சில மாநிலங்களில் தொழிலாளர்கள் நடைபயணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு மேற்கொண்டனர். எனவே இவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள கட்டணம் செலுத்துவது அவசியம் ஆகும்.இந்த வேளையில் பல்வேறு தொழிலாளர்கள் பணம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரொனா ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு சொல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த பணம் இல்லாதவர்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கட்டணதொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Statement Of Congress President Smt. Sonia Gandhi
The Indian National Congress has
taken a decision that every Pradesh
Congress Committee shall bear the cost for the rail travel of every needy worker and migrant labourer and shall take necessary steps in this regard pic.twitter.com/kxruKa0xgI— Congress (@INCIndia) May 4, 2020