ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

Default Image

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர்.

நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுவதன் மூலம், மக்களில் பலர் ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

அந்த வகையில், 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர், ரூ.400 மதிப்புள்ள பூஜியா பாக்கெட்டுகளை (திண்பண்டங்கள்) ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்த உணவுப்பொருள் அவருக்கு கிடைக்காத காரணத்தால், இதுகுறித்து புகார் செய்வதற்கு ஹெல்ப்லைன் சேவை எண்ணை தேடியுள்ளார். ஆனால், இவருக்கு கிடைத்தது சைபர் மோசடி செய்பவர்கள் பதிவேற்றிய போலியான தொலைபேசி எண். இந்த எண்ணை அந்த தொழிலதிபர் தொடர்புகொண்ட  போது, அவரிடம் இருந்து வங்கி விவரங்களான யுபிஐ எண் மற்றும் ஒடிபி ஆகியவற்றை கேட்டு விசாரித்துள்ளனர். இதன் பின் விளைவை அறியாத தொழிலதிபரும், தனது வங்கி கணக்கு விபரங்களை கூறியுள்ளார். 

இந்த தொழிலதிபர் தனது வங்கி விபரங்களை கொடுத்த சில மணி நேரங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், மும்பை சேர்ந்த போரிவாலி என்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்