பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது.!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 35,66,330 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,48,286 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11,54,072 பேர் குணமடைந்து உள்ளார்கள். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 20,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 20,084 பேரில் 5,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.