வரலாற்றில் இன்று(04.05.2020)…. தன்னுயிர் தந்து இன்னுயிர் காக்கும் சர்வதேச தீயனைப்பு படையினர் தினம் இன்று…
உலகில் முதன்முதலில் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட தீயணைப்புப் படையினர் தினம் தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 தீயனைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.இவர்களை நினைவு கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் மிகப்பெரிய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே மாதம் 4 ஆம் நாள் உலக தீயனைப்பு படையினர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்கு மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி தெரிவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. எனவே வரலாற்றில் இன்று சர்வதேச தீயனைப்பு படையினர் தினம்….