ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Default Image

ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடையில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு இந்த முதியவர் சென்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று பரவியதால் ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.எனவே இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த முதியவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதற்கு காரணம் முதியவர் ஆந்திராவில் இருந்து திரும்பும்போது சேலம் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.இதனால் கிருஷ்ணகிரி மட்டுமே தமிழகத்தில் பச்சை மண்டலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்