இங்கிலாந்து பிரதமருக்கு பிறந்த ஆண் குழந்தை… கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்திய ஜான்சன்…

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் ஆகிய இரு தம்பதிகளுக்கும் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்களின் செய்தி தொடர்பாளர், தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களது பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார் போரிஸ் ஜான்சன். இதுதொடர்பாக,இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி கேரி சைமண்ட்ஸ் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் குழந்தைக்கு நிக்கோலஸ் என்ற பெயரையும் சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025