கொரோனோவால் சத்தீஸ்கர் முன்னாள் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் !

Default Image

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .

முன்னாள் நீதிபதி திரிபாதி க்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை ) இரவு 9 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52 .

ஏ.கே.திரிபாதி இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பாலின் நீதித்துறை உறுப்பினராகவும், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.

அவர் கடந்த மாதம் எய்ம்ஸில் கோவிட் -19 க்கு  சோதனை செய்தார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது . அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் .பின்னர் அந்த பகுதி கோவிட் -19 க்கான பிரத்தேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது .திரிபாதி தான் அந்த மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட முதல் நபர் .

அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை மிகவும்  மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்