கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிசாசு பட நடிகை!
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மலையாள நடிகை பிரயாகா மார்டின்.
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கேற்ப சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர், இதனையடுத்து, கேரள காவல்துறை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சினிமா பிரபலங்களையும் உதவிக்கு அழைத்து உள்ளனர்.
இந்நிலையில், தமிழில் பிசாசு உள்ளிட்ட சில படங்களில் நடித்த மலையாள நடிகை பிரயாகா மார்டின் கேரள போலீசுக்கு உதவும் விதமாக அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.