அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் – நடிகை சுவாதி
அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என நடிகை சுவாதி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், அப்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை சுவாதி இணைய பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாம் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகிறோம். மற்றபடி கடந்த ஒரு மாத காலமாக வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறோம். இதனால் தான், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.