அரசு ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு.!
50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளில் மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்திக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பள்ளிக் கல்வித்துறை 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.