கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த 19 பேருக்கு கொரோனா.!
கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அரியலூரில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா இருந்துவந்தது. இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா சிகிச்சைககா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.