எச் -1 பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு காலம் அவகாசம் நீடிப்பு .!
H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக 60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் , அமெரிக்காவில் 65,000 க்கும் அதிகமானோர் மற்றும் உலகளவில் 235,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும் ஒருவரின் வேலை ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் விசா ரத்தாகி தங்கள் நாடுகளுக்கு திரும்ப நிலை ஏற்படும். இந்நிலையில், எச்1-பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக 60 நாள்கள் அவகாசம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.