அனுமதி சீட்டுக்கு நேரில் வராதீர்கள் – சென்னை மாநகராட்சி!

Default Image

வெளியூர் செல்ல அனுமதிக்கு நேரில் வரவேண்டாம் எனவும்  இணையத்தளம் மூலமாக அனுப்பலாம் எனவும் சென்னை மாநகராட்சி விளக்கம்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்தியா முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகளவு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை விளங்குகிறது.

இருப்பினும், சென்னை மக்கள் தங்களது உறவினர்களின் நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவ பயணங்கள் மற்றும் உறவினர்களின் மரணம் ஆகியவற்றிற்கு முன்னனுமதி பெற்று வெளியூருக்கு செல்லலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்பொழுது முன்னனுமதி வாங்குவதற்கு யாரும் நேரில் வந்து விண்ணப்பிக்க தேவையில்லை எனவும்,   இணையதளங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்