மக்களுக்கு ஒரு நற்செய்தி! 10 லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!
10 லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பினர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை இந்த வைரஸை முழுமையாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் இதுவரை, 3,401,110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,604 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், சிகிச்சை பெறுபவர்களில் 49,496 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தால், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பக்கம் கவலையளித்தாலும், இன்னொருபக்கம், இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை ஆறுதலை அளிக்கிறது. அந்த வகையில், இதுவரை 10 லட்சத்து 75 ஆயிரத்து 970 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.