உயிரோடுதான் இருக்கிறார் கிம் ! தொழிற்சாலையை திறந்து வைத்த புகைப்படத்தை வெளியிட்ட வடகொரிய செய்தி நிறுவனம்
பல்வேறு வந்ததிகளுக்கு மத்தியில் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றுள்ளார்.
வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அவருக்கு மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் அதிகம் உலாவி வந்தது. சிஎன்என் செய்தி நிறுவனம், வட கொரிய விவகாரங்களை கவனித்து வருகிறது.இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியிலும் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தது.
இதனிடையே வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வமற்ற செய்திகளுக்கு, அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரியா உறுதியாக கூறியது.இந்நிலையில் பல்வேறு வந்ததிகளுக்கு மத்தியில்
பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.வடகொரியாவில் உள்ள சன்சியான் நகரில் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி கிம் ஜாங் உன்தொடங்கி வைத்தார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
NEW photos of Kim Jong Un:
KJU was reported to have attended a ribbon cutting event at the Sunchon fertilizer factory to mark May 1’s International Labor Day, making it his first public appearance in state media in 21 days. https://t.co/LAeDR8b2DE pic.twitter.com/0FBVlUWgZF
— NK NEWS (@nknewsorg) May 1, 2020