தமிழகத்தில் எவையெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் ! !

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என  மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பட்டியல் :-

1. சிவப்பு மண்டலம் : மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும்.

சென்னை, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மதுரை, ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

2. ஆரஞ்சு மண்டலம் : மே 4 முதல் ஓரளவு கட்டுப்பாடுகள் இருக்கும்.

கோவை,தேனி, கரூர், தூத்துக்குடி, நீலகிரி, கடலூர், தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, விழுப்பரம்,சேலம், திருச்சி, திருப்பத்தூர்,தருமபுரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் என 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன.

3. பச்சை மண்டலம் : மே 4 முதல் ஊடங்கு தளர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக இருக்கிறது. இங்கு இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்பதே காரணம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்