மதுக்கடைகள் திறக்கலாம்.! மத்திய அரசு அறிவிப்பு .!
இந்தியாவிலும் கொரோனா பரவல் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என மூன்றாக பிரித்து அதற்கேற்ப நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், பச்சை மண்டல பகுதிகளில் எவை எல்லாம் இயங்க அனுமதி என மத்திய அரசு அதற்கேற்ப நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
- பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
- 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநர் உட்பட 3 பேர், இரு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேரும் செல்லலாம்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் இயங்க அனுமதி.
- பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.
- பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகள் திறக்கலாம். ஆனால் 6 அடி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.