பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது.!
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பொது முடக்கத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என்றும் பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதித்துள்ளது. இங்கு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் என்றும் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை எனவும் அறிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம். அந்தந்த மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம் என அறிவித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோல அடுத்த 21 நாட்களுக்கு ரயில், விமானம் மற்றும் மெட்ரோ போன்றவைகளும் இயங்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.