சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்.! மத்திய அரசு அனுமதி.!
வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர். பலர் நடத்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.
ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரயில்வே துறை சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,200 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.