விவசாயத்தில் ஈடுபட போகும் பிரபல தமிழ் நடிகர் !

Default Image

கடந்த சில வருங்களாக நடிகர் நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். அதுகுறித்து அவ்வப்போது நிறைய மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ஆரி, அண்மையில் விவசாயத்தை முன்னிறுத்தி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.

தற்போது  நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘‘என்னுடைய மகளுக்கு இதுவரை நான் சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தது இல்லை, அப்படி இருக்க நான் எப்படி அந்த மாதிரி உணவுகளை சாப்பிடுங்கள் என்று விளம்பரத்தில் நடிக்க முடியும். இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். பிற்காலத்தில் இதை விட பெரியதாக விவசாயம் செய்ய விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்