கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306 ,42,10,558 நிதி பெறப்பட்டுள்ளது- தமிழக அரசு

Default Image

கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306 ,42,10,558 நிதி பெறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதி வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிதிகளுக்கும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் அவர்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 306 , 42,10,558 வழங்கப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ. 145  48 , 35 ,986  வழங்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் 110 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்