மாஸ்க் போடலையா! அப்போ பொருட்கள் கிடையாது போலீசார் எச்சரிக்கை!

உடன்குடி பஜாருக்கு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கக்கூடாது என போலீசார் அறிவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் உடன்குடி பஜாரில் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பால்,மளிக, காய்கறி, பழ கடை, பேக்கரி என அத்தியாவச பொருட்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது.
குலசேகரபட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் உடன்குடி பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்த போது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர். அப்போது பஜாருக்கு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கக்கூடாது என அறிவித்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025